மானுட வேட்டை போலில்லை
புலிகளின் வேட்டை.
புலிகளின் 'இரை'யாண்மை - தாமிரா
Posted by
PRINCENRSAMA
at
4
comments
Labels: கவித்துவமாய்_கொஞ்சம், புரட்சி
“கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டி--2008”
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்தும் “கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டி--2008” தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கடந்த ஆண்டு நடத்தியது போலவே இந்தஆண்டும் கந்தர்வன் நினைவுச் சிறுகதைப் போட்டியை நடத்திடத் திட்டமிட்டுள்ளது.
முதல் பரிசு : ரூ.5,000
இரண்டாம் பரிசு : ரூ.3,000
மூன்றாம் பரிசு : ரூ.2,000 மற்றும்
தேர்வுபெறும் சிறந்த சிறுகதை ஒவ்வொன்றிற்கும் ரூ.250 பரிசளிக்கப் படுவதோடு, கதைகள் சிறந்த இலக்கிய இதழ்களில் வெளியிடப்படும்.இந்த ஆண்டு பரிசுத்தொகையை, பிரபல திரைக்கவிஞர் நா.முத்துக்குமார் வழங்குகிறார்.
விதிமுறைகள்:
ஒருவரே எத்தனை கதைகளை வேண்டுமானாலும் அனுப்பலாம்.கதை எழுதியவர், அதுதனது சொந்தக் கற்பனையே என்றும் வெளியிடப்படாதது என்றும் உறுதிதந்து, பெயரைத் தனித்தாளில் முகவரி, தொலைபேசி எண்ணுடன் தரவேண்டும். (கதைப்பக்கங்களில் எழுதியவர் பெயர் முகவரி இருக்கக் கூடாது)வெளிநாடுகளில் இருப்போர் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு, கதைகளை அனுப்பலாம்.
சிறுகதைகள் வரவேண்டிய கடைசி நாள: 11-09-2008
சிறுகதைகளை அனுப்ப வேண்டிய முகவரி:
நா.முத்து நிலவன்,
(துணைப்பொதுச்செயலர் -தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்)
96, சீனிவாச நகர் 3ஆம் தெரு,புதுக்கோட்டை – 622 004
செல்பேசி : 94431-93293
Posted by
PRINCENRSAMA
at
0
comments
Labels: அறிவிப்பு
விட்டு..விட்டு.. ஆனால் விடாமல்...
விட்டு..விட்டு.. ஆனால் விடாமல் வருகிறது....
குசேலன் இசை வெளியீடு... நேரடி ஒளிபரப்பு!
Posted by
PRINCENRSAMA
at
0
comments
Labels: ஒளிபரப்பு
குசேலன் இசை வெளியீட்டு விழா-நேரடி ஒளிபரப்பு
Posted by
PRINCENRSAMA
at
1 comments
Labels: ஒளிபரப்பு
குத்திக் காட்டியது - என் தமிழ்.
தாத்தாவின் மூக்குக் கண்ணாடி
கை தவறி விழும் முன் சொன்னேன்
'Sorry ' தாத்தா என்று …!
தூங்கும் போது கழுத்து வரை
போர்த்தி விடும் கருணை -
தூக்கத்திலும் சொல்வேன்
'Thanks ' ம்மா என்று …!
நாளை நண்பனின் பிறந்த நாள் - இன்றே
வாழ்த்து அட்டையில் எழுதினேன்
'Happy Birthday da' என்று …!
காலையில் நாளிதழ் படிக்கும் பொழுது எதிர் வீட்டுக்காரர்
அவர் சொல்லும் முன் முந்திக் கொள்வேன்
'Good Morning Uncle' என்று …!
கோயிலில் பத்தாம்
வகுப்பு சிநேகிதி கணவனுடன்
அவள் பேசும் முன் முடித்துக் கொள்வேன்
'Hai' என்று …!
மாலையில் கடற்கரையில் என்னவள் - மணலில்
அவள் விரல் பிடித்தே எழுதுவேன்
'I Love You' என்று …!
இரவில் …
வீட்டிற்கு செல்லும் வழியில் - காலை
குத்தியது முள் …'அம்மா'
என்று அலறினேன்.
குத்தியது முள்ளில்லை - என்னை
குத்திக் காட்டியது - என் தமிழ்.
Posted by
PRINCENRSAMA
at
1 comments
Labels: சிந்தனைச்சிதறல்கள், யாரோ சுட்டது
திரை விழா நேரடி ஒளிபரப்பு
பிரமிட் சாய்மீராவின் உலக சாதனையாக ஒரே நேரத்தில் 10 தொடங்கப்படும் திரைப்படங்களின் தொடக்கவிழாவின் நேரடி ஒளிபரப்பு "ennares creations"ன் ennares.blogspot.com-இல் ஒளிபரப்பாகிறது.
Posted by
PRINCENRSAMA
at
0
comments
Labels: ஒளிபரப்பு
தமிழ்மகள் - பரிசுப் போட்டி
அன்புடன் நண்பர்களுக்கு!
வணக்கம்!
ஆங்கில மொழியின் ஆதிக்கத்தில் இருந்த இணையத் தளத்தில் தமிழ் மொழியின் பங்களிப்பை பெருக்குவதில் தமிழ் குழுமங்கள் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன என்றால் மிகையாகாது. தமிழ் மொழியை சுவாசிக்கும் அத்தனை இதயங்களுக்கும் இக் குழுமங்கள் இலக்கியத்தையும் , இலக்கணத்தையும், வரலாற்றையும், அன்றாட உலக நடப்புகளையும் அலசும் கருத்துக் களமாக விளங்குவதோடு நல்ல பல நட்புகளையும் வழங்கி இருக்கின்றது. இலைமறை காயாக இருக்கும் பல படைப்பாளிகளை வெளிச்சத்துக்கு கொண்டு வர இணையத் தளமும் , வலைப்பூக்களும் , தமிழ் குழுமங்களும் பெரிதும் உதவி வருவது ஆத்ம திருப்தியை தரும் விசயமாக இருந்து வருகிறது. இத்தனை பெருவெள்ளமாக இலக்கியப் பெருக்கும், கருத்துக் களமுமாக தமிழ் குழுமங்கள் வளர்ந்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் அதில் ஒரு துளியாக, சிறு தளமாக எமது தமிழ் பிரவாகம் உருவாகி வருவது குறித்து நாம் மிகவும் பெருமையடைகின்றோம்.
தமிழ் பிரவாகத்தின் அன்புக்குரிய உறுப்பினர்களுக்கும் , எமது குழுமத்தின் வளர்சியிலும் நலனிலும் அக்கறை கொண்டு பின் புலத்தில் எமக்கு ஆதரவாகவும் உறுதுணையாகவும் இருந்து வரும் நல் இதயங்களுக்கும் இந்த வேளையில் எமது மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவிக்க விழைகிறோம்.
வரும் மே மாதம் 1ம் திகதி தனது முதலாம் ஆண்டு பூர்த்தியை தமிழ் பிரவாகம் மிகச் சிறப்பாக கொண்டாடும் இலக்குடன் வலை உலகில் இலக்கிய ஆர்வத்துடன் இருக்கும் சகலரும் பங்கேற்கும் வண்ணம் இலக்கியப் போட்டிகளை நடத்த திட்டமுள்ளது. போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கான பரிசுகள் வரும் ஜூலை மாதம் நடை பெறவிருக்கும் முத்தமிழ்- பிரவாக நண்பர்களின் சந்திப்பில் வழங்கப் படும்.
போட்டிகளின் விபரங்கள் வருமாறு:
இலக்கியப் போட்டிகள் சிறுகதை கவிதை கட்டுரை நகைச்சுவை துணுக்கு ஆகிய பிரிவுகளில் நடாத்தப்படும். ஒருவர் எத்தனை போட்டிகளிலும் பங்கு பெறலாம். ஆனால் ஒவ்வொரு போட்டியிலும் ஒரு ஆக்கம் மட்டுமே அனுப்பலாம். ஆபாசம் அல்லது தனி மனிதக் கீறல் இருப்பதாகக் கருதப்படும் எந்த ஆக்கமும் போட்டியிலிருந்து நீக்கப்படும் அதிகாரம் நடுவர்களுக்கு வழங்கப்படும்.
போட்டிகளுக்கான ஆக்கங்கள் நம்மை வந்தடைய வேண்டிய கடைசி திகதி 2008 ம் ஆண்டு மே 31ம் திகதி.
சிறுகதை & கட்டுரை போட்டிகளின் பரிசு விபரங்கள்:
1வது பரிசு - 2500.00 பெறுமதியான புத்தகங்களும், 2500.00 இந்திய ரூபாயும் வழங்கப்படும்.
2 வது பரிசு- 1250.00 பெறுமதியான புத்தகங்களும் 1250.00 இந்திய ரூபாயும் வழங்கப்படும்.
3 வது் பரிசு் - 750.00 பெறுமதியான புத்தகங்களும், 750.00 இந்தியப் ரூபாயும் வழங்கப்படும்.
பரிசு பெறும் ஒவ்வொரு ஆக்கமும் தமிழ் பிரவாகத்தின் முதலாம் ஆண்டு மலரிலும், குழுமத்திலும் பிரசுரமாகும். மற்றைய ஆக்கங்கள் தமிழ் பிரவாகக் குழுமத்தில் பிரசுரமாகும். சிறுகதை:ஆபாசம் , தனி மனித கீறல் போன்ற கசடுகள் அற்ற நாகரீகமான , இயல்பான ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம். எத்தகைய கருவையும் பின்னணியாகக் கொண்டு கதை புனையப்படலாம். ஒருவர் ஒரு சிறுகதை ஆக்கம் மட்டுமே அனுப்பலாம். சிறுகதை 7 பக்கங்களிலிருந்து 10 பக்கங்களுக்குள் இருக்க வேண்டும். நடுவர்களின் முடிவே இறுதியானது.
கட்டுரை:ஆபாசம் , தனி மனித கீறல் போன்ற கசடுகள் அற்ற நாகரீகமான , இயல்பான ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம். கட்டுரைகள் இங்கு தரப்பட்டிருக்கும் தலைப்புகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து ஒருவர் ஒரு கட்டுரை மட்டும் எழுதலாம்.
ஒவ்வொரு கட்டுரையும் 1000 சொற்களுக்கு மேற்படாதவையாக இருக்க வேண்டும். கட்டுரைகளுக்கான தலைப்புகள் பெண்ணியம். உலக அரங்கில் புலம் பெயர்ந்த தமிழர்களின் இன்றைய நிலை. தமிழ் கலாச்சாரமும் , இந்துசமயத்தின் ஆதிக்கமும்.உலக அரங்கில் இந்தியா வல்லரசாகக் கணிக்கப்டுகிறாதா இல்லையா?ஈழத்தமிழரும் , இந்திய அரசியலும். அரசியலில் பொது மக்களின் பங்கு. கடவுள் பக்தியா , சுய கட்டுப்பாடா மனிதனை செம்மைப்படுத்தவல்லது? தியானம் என்பது....!நகைச்சுவைத் துணுக்கு:ஆபாசம் , தனி மனித கீறல் போன்ற கசடுகள் அற்ற நாகரீகமான , இயல்பான ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம். ஒருவர் ஆகக் குறைந்தது ஐந்து துணுக்குகளை ஒரே தாளில் அனுப்பலாம். ஆனால் சிறந்த துணுக்காக 3 துணுக்குகளே தேர்வு செய்யப்படும். ஒவ்வொரு துணுக்கும் பரிசாக தலா 1000.00 இந்திய ரூபாய்கள் வழங்கப்படும்.
கவிதை:கவிதைப் போட்டி 4 பிரிவுகளில் நடத்தப்படும்.மரபுக் கவிதை. வெண்பா. புதுக்கவிதை. நவீனத்துவம்.ஒவ்வொரு பிரிவிலும் ஆபாசம் , தனி மனித கீறல் போன்ற கசடுகள் அற்ற நாகரீகமான , இயல்பான ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம். இரண்டு பக்கங்களுக்குள் கவிதை இருக்க வேண்டும்.
1வது பரிசு 1500.00 ரூபா பெறுமதியான புத்தகங்களும் 1500.00 இந்திய ரூபாயும் வழங்கப்படும்.
2வது பரிசு 1000.00 ரூபா பெறுமதியான புத்தகங்களும் 1000 .00இந்திய ரூபாயும் வழங்கப்படும்.
தமிழ் பிரவாகத்தின் முதலாம் ஆண்டு இலக்கியப் போட்டியில் யாரும் கலந்து கொள்ளலாம். பரிசு பெறும் ஆக்கங்கள் ஆண்டு மலரிலும் , தமிழ் பிரவாகக் குழுமத்திலும் பிரசுரிக்கப்படும். மற்றைய ஆக்கங்கள் தமிழ் பிரவாகக் குழுமத்து இழைகளாகப் பிரசுரிக்கப்பட்டு உறுப்பினர்களின் கருத்துப்பகிர்வுகளுக்கு சமர்பிக்கப்படும்.
எந்தவொரு ஆக்கமும் தனிமடலில் thamizmakal@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படவேண்டும்.
போட்டி சம்மந்தமான மேலதிக விபரங்களுக்கும் இதே மின்னஞ்சல் மூலமே தொடர்பு கொள்ளவும்.
இணையத் தளத்தில் எழுதிவரும் அத்தனை அன்புள்ளங்களும் இவ் அறிவித்தலை ஏற்று பங்குபெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுவதோடு ஆர்வமுள்ள படைப்பாளிகள் , இணையத்தள அனுபவமில்லாத ஆனால் எழுத்துத் திறமையுடைய உங்கள் நண்பர்களுக்கும் தெரிவிக்குமாறும் பணிவன்புடன் வேண்டுகின்றோம்.
*படைப்புகள் கட்டாயமாக யுனிகோடு முறையிலான ஈ-கலப்பை தமிழ் உருவிலே தட்டச்சுப் பெற்றிருக்க வேண்டும் என்பது மிக முக்கியம்.
இந்த இலக்கியப் போட்டிகளை அனைவரும் அறிந்துகொள்ள உதவியாக குழும உறுப்பினர்களும், நண்பர்களும் இவ் இலக்கியப் போட்டி அறிவித்தலை தத்தமது வலைப்பூக்களிலும் , வலைத்தளத்திலும் பிரசுரிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். நன்றி !
மூச்சடக்கி முக்குளித்து மூவாயிரம் சிப்பியிலோர் முத்தை ஒத்த பேச்செடுத்துக் கோர்த்துயரும் கருவை அளிக்க மையெடுத்துப் போதிலையென மருகி காட்சிக்கடல் கண்டெடுத்தும் காணான் தானும் களித்திலையெனில் விண்ணேகி மாட்சிமுகில் சாறெடுத்து வந்துசாற்றித் தமிழ்ப்பாலை ஒன்றும் வெறியாம்! -- சாவு நெருங்கி வரும் போதும் - தமிழ் மானம் காத்திரடி பாப்பா!!வணக்கம்!!--
இங்ஙனம்
தமிழ் மகள்
----------------------------------------------------------------------------------------------------------------
இந்தப் பரிசுப்போட்டிக்கும் எமக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. இணையத்தில் யாம் கண்ட தகவலை நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளும் நோக்கிலேயே இப்பதிவு இங்கு இடப்படுகிறது.
Posted by
PRINCENRSAMA
at
0
comments
Labels: பரிசுப் போட்டி
