உயிர்மெய்: அம்மா பகவான் சாயிபாபா எதிர்ப்புப் பிரசாரப் பாடல்

மூடத்தனத்தை வளர்த்து, அதன் மூலம் வயிறு வளர்க்கும் கும்பலைச் சாடி ஒரு அருமையான முயற்சி செய்திருக்கிறார் தோழர் மு.மயூரன்.

"எனக்கு இசை தொழிலல்ல. சரியாகப் பாடவோ இசையமைக்கவோ வராது. இணையவழிப் பிரசார நோக்கத்துக்காக ஒரு பாடல் செய்ய வேண்டி இருந்தது. உடனடியாக எனக்கு இசைஞர்களின் உதவியைப்பெறும் வாய்ப்புக்களோ காசோ இல்லாததால் நானே செய்து முடிதேன். கேட்பதற்குக் கர்ண கடூரமாக இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்." என்ற அறிமுகத்துடன் பாடலைத் தந்திருக்கிறார்.

அப்படியெல்லாம் சங்கடப் பட வேண்டியதே இல்லை. ஈழத் தமிழர்கள் பாபாவிடம் நன்கு ஏமாந்தவர்கள். எனவே நமது சரக்கையும் நன்கு விற்கலாம் என்று கடை விரித்திருக்கும் கல்கி கயவனை மட்டுமல்ல... சாமியார்கள் அனைவரின் மீதான் சாடலாகவும், இப்பாடல் வெளிவந்துள்ளது. வாழ்த்துகள் மயூரன்... தொடரட்டும் நின் பணி....

குரு என்கிறோம்
கல்கி இவர் என்கிறோம்
பரமாத்ம அவதாரம் இது என்கிறோம்

அவதாரம் நடமாடும் திருமண்ணிலே – அட
அநியாயம் அதிகாரம் தொடர்கின்றதேன்?
பகவான்கள் சொகுசாக வாழும் போதிலே – பலர்
பசியோடும் வலியோடும் சாகநேர்வதேன்?

எளியோர்கள் துயர் தீர்க்கப் போராடினான் -யேசு
வலியோடு வதை தாங்கிக் கொலையாகினான்
நபிநாதன் சனத்தோடு சேர்ந்து வாழ்ந்தவன் – புத்தன்
தெருவெங்கும் பிச்சைதான் வாங்கி உண்டவன்

பலகோடிச் செலவோடு மாளிகைகளாம் -இவன்
பட்டாடை படுக்கைக்கு லட்சலட்சமாம்
உழைக்காத ஊதாரி இவன் அல்லவா? – இந்த
எருமைக்கு செருப்பாலே பதில் சொல்லவா?

2 comments:

said...

அருமையான முயற்சி.உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள். அந்த காணொளியில் பரதேசி பகவானை கொண்டாடுபவனெல்லாம் மெத்தப்படித்த மேதாவிகளும் மூதேவிகளும் தான். என்றுதான் திருந்துவான்களோ ?

said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in